மேலத்தெரு குத்துபாகாரி குடும்பத்தை சேந்த பெரிய ஜும்மா பள்ளியின் முன்னாள் கத்திப் மௌலவி மர்ஹூம் ஹாஜி S.M.ஷஃனுன் லெப்பை ஆலிம், குத்துபாகாரி மௌலவி மர்ஹூம் ஹாஜி S.M.குத்புதீன் ஆலம் ஆகியோரின் பேரனும் டீக்கடை S.காதர் மைதீன் அவர்களின் மகனும் K. தபுரே ஆழம் பாதுஷா அவர்களின் சகோதரருமாகிய சம்சுல் மக்கி என்கிற குலைது அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 26/04/2023 இன்று ளுகர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
இறைவா! (அன்னாரை)
) மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்ரை) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!
தகவல் :- *TIYA*