ஆனால் பலரும் அதை கடைபிடிக்காமல் மில்லிங் செய்யாமல் சாலை அமைத்து வருகிறார்கள். குறிப்பாக அதிராம்பட்டினத்தில் ரூ.2.5 கோடி செலவில் அமைக்கப்படும் சி.எம்.பி. லேன் சாலையும் பழைய சாலையை தோண்டாமல் அமைக்கப்படுகிறது. இப்படி இருக்க அதிரை 6 வது வார்டில் பழைய சாலையை தோண்டி எடுத்து அதே மட்டத்தில் புதிய தார் சாலை அமைத்து வருகிறார்கள்.
அதிரை ஆலடித்தெரு, அம்பேத்கர் நகர் பகுதிகளில் 240 மீட்டரில் அமைக்கப்படும் இந்த சாலைக்காக பழைய குண்டும் குழியுமான சாலை ஜேசிபி மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது. அதிரை 6வது வார்டு கவுன்சிலர் கனீஸ் பாத்திமாவின் கணவர் காமில் சாலை பணி நடைபெறும் இடத்தில் நின்று மில்லிங் செய்துதான் சாலை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி அதை கண்காணித்தும் வருகிறார்.
இது குறித்து அவர் நம்மிடம் பேசுகையில், "முதலமைச்சரின் உத்தரவுக்கு இணங்க பழைய சாலையை தோண்டிவிட்டு புதிய தரமான சாலை அமைக்கிறோம். இங்கு தோண்டி எடுக்கப்படும் பழைய சாலை, கற்களை பள்ளமாக இருக்கும் அதிரை வாய்க்கால் தெரு அரசு நடுநிலை பள்ளியில் மழை நீர் தேங்காத அளவுக்கு கொட்டி வருகிறோம்." என்றார்.