ரமலான் பிறை பார்த்ததாக அறிவித்த TNTJ.. நாளை முதல் நோன்பு நோற்க அழைப்பு

Editorial
0
தமிழ்நாட்டில் அருள்மிகு ரமழான் மாதம் ஆரம்பம் மற்றும் நோன்பு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்து உள்ளதாவது, "தமிழகத்தில் ரமழான் மாத பிறை தேட வேண்டிய நாளான  22-02-2023 புதன் கிழமை அன்று மக்ரிபிற்கு பிறகு தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில்  பிறை பார்க்கப்பட்டது!

நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் ஷாஃபான் மாதம் நிறைவுபெற்றது. எனவே 22/03/2023 புதன் கிழமை  இரவு நேரம் முதல் ஹிஜ்ரி 1444 ரமழான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பானது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்!

இன்ஷா அல்லாஹ் 23-03-2023 வியாழக்கிழமை முதல் ஸஹர் செய்து நோன்பு நோற்க  ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

பிறை பார்த்த சாட்சிகள்

யூசுப்:7639383906
ஜலாலுத்தீன்: 9488846201" என்று குறிப்பிட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...