இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் செயலாளர் திரு. ஏ. முகம்மது ஃபாரூக் அவர்கள் மறைவு எய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். திரு.ஏ. முகம்மது ஃபாரூக் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
அதிரை கம்பியூட்டர் ஃபாரூக் மறைவால் துயரம் அடைந்தேன் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல்
March 30, 2023
0
அதிரை காலியார் தெருவை சேர்ந்த காங்கிரஸ் நகர செயலாளர் பாருக் (கம்பியூட்டர் பாருக்) நேற்று வஃபாத்தாகிவிட்டார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.