தமிழ்நாட்டில் 151 கல்லூரிகளை உள்ளடக்கி இருக்கு வரலாற்று சிறப்புமிக்க திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் அம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரி ஊட்டச்சத்து & உணவுமுறை (Nutrition & Dietetics) துறையில் முதலிடம் பிடித்து உள்ளது.
இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த நூருல் ஸபீலா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். 3 ஆண்டுகள் முபல்லிஹா படிப்புடன் ஊட்டச்சத்து & உணவுமுறை பட்டம் படித்து முதலிடம் பிடித்துள்ள அவருக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.
இந்த மாணவிகளுக்கு பல்கலைக்கழக N&D பாடத்துடன் கூடுதலாக தமிழர்களின் பாரம்பரிய உணவு ஊட்டச்சத்து மருத்துவம் ஆகிய பாடங்களும் நடத்தப்படுகின்றன. வரலாறு கணிதம் கணினி அறிவியல் ஆகியத் துறைகளின் மாணவிகளும் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.