அதிரை பிறைக்காக இவர் எடுத்த படங்கள் சன் நியூஸ், நியூஸ் 7, கேப்டன் டிவி ஆகிய தொலைக்காட்சிகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்று வரை அதிரை ரயில் நிலையத்தில் இவர் எடுத்த படம்தான் அதிராம்பட்டினத்துக்காக பொது படமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவர் எடுத்த செக்கடி பள்ளியின் படங்கள் அதிரை மக்கள் மட்டுமின்று பல வெளியூர் வாசிகளின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை அலங்கரித்துள்ளது.
இந்த நிலையில் இஸ்லாமியர்களின் புனித பூமியான மக்காவுக்கு சென்ற இவர், புனிய கஃபத்துல்லாஹ்வை துல்லியமாக படம் பிடித்துள்ளார். இது காண்போரை கவர்ந்துள்ளது.