விளம்பரம்:
இந்த நிலையில் இந்த சிறப்பு ரயில் அதிராம்பட்டினம் ரயில்நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று ரயில்வே பொது மில்லியர் அவர்களுக்கு அதிரை நல்வாழ்வு பேரவை தலைவர் அஹமது அலி ஜாஃபர் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள மனுவில், "உங்களுடைய கடிதத்தில் தாங்கள் எழுதிய விபரப்படி வாரத்தில் 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம், செங்கோட்டை வழி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி வரை செல்லும் என்று ரயில்வே போர்டு காலக்குறிப்பு Time - Table 2022 என்று முடிவு சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் நாங்கள் தரக்கூடிய திருத்தம் இதை வழக்கமாக இந்த வழியில் சென்று கொண்டிருக்கும் ரயில்கள் வழி மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை என்று குறிப்பிட்டீர்கள். அதில் திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டைக்கு இடையில் அதிராம்பட்டினம் என்ற ஊர் விடுபட்டிருக்கிறது. அதை தயவுசெய்து இணைத்து காரைக்குடி வரை ஓட வேண்டிய ரயிலை ரயில்வே போர்டுக்கு சொல்லி அந்த கவுன்சிலுக்கு தெரிவிக்க வேண்டியது.
நீண்ட ரயில்களில் அதிராம்பட்டினம் காலமாக வரக்கூடிய சிறப்பு இணைக்கப்பட்டு உள்ளது. அதிராம்பட்டினத்தில் நின்று போக அந்த Time Table நிச்சயமாக குறிப்பிட்டு எழுத வேண்டியது முக்கியம். இதற்கு முன் வாரத்தின் மூன்று நாட்கள் ஓடிக்கொண்டு இருந்த திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி வழி: செங்கோட்டை, எர்ணாகுளம் போய் சேர்ந்தது. அதிலும் அதிராம்பட்டினம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதை தயவுசெய்து சந்தேகம் இருந்தால் பழைய Time-Table பார்த்துக்கொள்ள வேண்டியது.
இதைப் பார்த்ததும் அந்த விடுபட்ட ஊரான அதிராம்பட்டினத்தை குறிப்பிட்டு இணைத்து எங்களுக்கு பதில் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். தாங்களின் உண்மையான பதிலை எதிர்பார்க்கிறோம்." என்று கேட்டுக்கொள்கிறோம்.