பொறியியல் படித்துவிட்டு சவூதி அரேபியாவின் அல் கசீம் பகுதியில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர், அங்கும் கிரிக்கெட் விளையாட்டை நிறுத்தவில்லை. அங்கும் சிட்னி அணியை உருவாக்கி கிரிக்கெட் தொடரையும் நடத்திய ரியாஸ், அங்குள்ள புரைதா ராயல் MCC அணிக்காவும் ஆடி வருகிறார்.
தற்போது அல் கசீம் பகுதியில் தேசிய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இதன் லீக் போட்டியில் ரியாஸின் ராயல் MCC அணி பாகிஸ்தான் நாட்டின் தஸ்லியா சிசி அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் பேட் செய்த ராயல் MCC அணி 194 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து ஆடிய தஸ்லியா அணி ரியாஸின் அசத்தலான பந்துவீச்சால் 98 ரன்களிலேயே ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது.
இதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ரியாஸ் அஹமது, ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த மூன்று விக்கெட்டுமே போல்ட் முறையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராயல் MCC அணியின் வெற்றிக்கு வித்திட்ட அதிரை வீரர் ரியாஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரை சக வீரர்கள் சுற்றி நின்று பாராட்டினர்.