அதிரை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய ஒரு இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள இரண்டாம்புலிகாடு பகுதியில் பேராவூரணியில் இருந்து அதிராம்பட்டினத்திற்கு வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மீதும் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை வந்த மற்றொரு அரசு பஸ் மீதும் திடீரென இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மர்ம நபர்கள் கல் எரிந்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த கல்விச்சு தாக்குதலில் பேருந்துகளின் முகப்பு கண்ணாடிகள் உடைந்த நிலையில் பேருந்தில் இருந்தவர்களுக்கு பயணிகள் காயம் இன்றி தப்பினார். ஒரே நேரத்தில் இரண்டு அரசு பேருந்துகள் மீது கல் எரிந்த சம்பவம் குறித்து சேதுவாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவல் பேரில் அங்கு சென்ற சேதுவாசத்திரம் போலீசார் பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி ஓடிய நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.