ஏராளமானோர் இவரது உணவகத்தில் பரோட்டா வாங்கிச் செல்கின்றனர். சில உணவகங்கள் ₹12 க்கு பரோட்டா விற்பனை செய்து வரும் நிலையில் இவர் ₹10க்கு அளவை குறைக்காமல் பரோட்டா விற்கிறார். இவர் தனது கடையில் வெளிப்படையாகவே "சாப்பாடு வாங்க முடியாதவர்கள் இலவசமாகவே சாப்பிட்டுக் கொள்ளட்டும். இது இறைவனின் சொத்து." என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.
இது குறித்து தாவூத் அவர்களிடம் நாம் பேசியபோது, "ஏழைகள் சாப்பிடுவதால் நமக்கு நன்மைதான். இயலாதவர்கள் யார் என்று தெரிந்து கொடுக்கிறோம்." என்று அலட்டிக்கொள்ளாமலும், இதை பெருமையாக கருதாமலும் கூறினார். தாவூத் அவர்களின் இந்த மகத்தான சேவை பாராட்டிற்குரியது.