அதிரை நகராட்சி ஆச்சு.. இருந்த ஒரே ஒரு பஸ்சும் போச்சு! சென்னை செல்ல அல்லல்படும் ஏழைகள்

Editorial
1

அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏராளமானோர் சென்னையில் தொழில், பணி நிமித்தமாக தங்கி இருக்கின்றனர். பலர் அங்கேயே சொந்த வீடு வாங்கி தங்கியுள்ளார்கள். இவர்கள் அல்லாமல் விமான நிலையம் செல்வத் உள்ளிட்ட சில தேவைகளுக்கு சென்னை சென்று ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு ஊர் திரும்புகின்றனர்.

இவர்கள் திருமணம், துக்கம், விடுமுறை, பண்டிகை காலங்களில் ஊருக்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது. சொந்த வாகனங்கள் வைத்திருக்கும் வெகு சிலரை தவிர பெரும்பாலானோர் பேருந்துகளிலேயே சென்னைக்கு சென்று வருகின்றனர். இதற்காகவே அதிரை வழியாக சென்னைக்கு ஏராளமான ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இது அல்லாமல் அரசு SETC பேருந்தும் அதிரை பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அதிரை - சென்னை இடையே இந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை செலுத்த வசதி இல்லாதவர்கள் இந்த SETC பேருந்தில் சென்றுவந்தனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக அதிரையில் இருந்து SETC பேருந்து சென்னைக்கு இயக்கப்படுவதில்லை. 

இதனால் பொருளாதாரத்தில் பொன் தங்கியவர்களும் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இது குறித்து அதிரையில் பல ஆண்டுகளாக சென்னை SETC பேருந்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்துவந்தவரிடம் அதிரை பிறை சார்பாக பேசினோம். 

அப்போது, "கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அரசு SETC பேருந்துகள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், நமதூரில் நேரில் முன் பதிவு செய்பவர்களே அதிகம். எனவே எண்ணிக்கை குறைந்து ஓராண்டுக்கு முன்பாகவே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இப்போதும் என் கடைக்கு முன்பதிவுக்காக வருகின்றனர். ஆனால் பேருந்து இல்லை. இங்கு மீண்டும் நேரடி முன்பதிவு மூல பேருந்து சேவை வர வேண்டும்." என கேட்டுக்கொண்டார்.

அதிராம்பட்டினம் கடந்த ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இங்கிருந்து நேரடியாக சென்னை செல்ல ஒரு பேருந்து கூட இல்லை என்பது சோகம்.

Post a Comment

1Comments
  1. All of your favorite titles at the moment are|are actually} out there at MrQ together with Shake Shake Leprechaun and Alice and the Mad Respin Party. Discover 1000s of the way to win with iSoftbet’s main slots and Megaways. 솔카지노 We’ll by no means charge you to withdraw, just as we are going to by no means maintain your winnings from you with wagering requirements. Great atmosphere and broad number of fun and thrilling games to enjoy, nicely as|in addition to} extremely pleasant and helpful workers. Kevin Blackwood is a highly successful blackjack and poker participant. He has written for a number of} gaming magazines and is the author of four gambling books.

    ReplyDelete
Post a Comment
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...