பல்வேறு புதிய முறைகளில் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் இப்பள்ளியில் STEM LAB எனப்படும் நவீன அறிவியல் தொழில்நுட்பக்கூடம் புதிதாக திறக்கப்பட்டு உள்ளாது. நேற்று நடைபெற்ற திறப்பு விழா பள்ளி தாளாளர் M.S. முஹம்மது ஆஜம் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூடத்தை பள்ளியின் முன்னாள் இயக்குனர் M.A அப்துல் காதர் தலைமை வகித்து திறந்து வைத்தார். இதில் பள்ளி முதல்வர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் Propeller technologies நிறுவனத்தின் சார்பாக கலந்துகொண்ட மூபீன் ஸ்டெம் லேப் பற்றி தெளிவாக விளக்கமளித்தார். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரித்து அவர்களை புதிய கண்டுபிடிப்புகளை செய்ய ஊக்குவிக்கும் வகையிலானது இந்த STEM பாடத்திட்டம்.
அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல உலக நாடுகளில் இந்த ஸ்டெம் பாடத்திட்டம் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடி உதவியுடன் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த பாடத்திட்டம் குறித்த சிறப்பை வகுப்பை நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்து உள்ள நிலையில், இமாம் ஷாபி பள்ளி இதற்கான தொழில்நுட்ப கூடத்தையே திறந்து முன்னோடியாகி இருக்கிறது.
புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த லேபில் 4 பிரிவுகளுக்கு உட்பட்ட நவீன கருவிகள் இடம்பெற்றுள்ளன. இது அறிவியல், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.