அதிராம்பட்டினம். செப் 19: அதிராம்பட்டினத்தில் தென்னை விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பும் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. ஆடுகள், மாடுகள் பால் உற்பத்திக்காக அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதேபோல் கோழி வளர்ப்பும் இங்கு அதிகம் உள்ளது.
விளம்பரம்:
இந்த நிலையில் அதிராம்பட்டினத்தில் ஆடுகள், மாடுகள் அதிகளவில் திருட்டுப்போவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கள்ளுக்கொல்லை பகுதியில் அதிகளவில் ஆடுகள், கன்றுகுட்டிகால் காணாமல் போவதாக கால்நடை வளர்ப்பவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதுவரை 8 ஆடுகள் காணாமல்போயுள்ளது என்றும், சரியாக வெள்ளிக்கிழமைகளில் ஆடு திருட்டு நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்த புகைப்படங்களில் இருக்கும் ஆடுகளை பார்த்தால் தங்களை தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளார்கள்.
தொடர்புக்கு: 9600389131, 9487253895
இந்த நிலையில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் வேட்டிக்குள் ஆட்டை மறைத்து திருடிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.