ஊர் எல்லை தொடங்கி முடியும் வரை முக்கிய சாலைகளிலும், முக்கிய வீதிகளிலும் சுமார் 40 பள்ளிவாசல்கள் அமைந்து அதிரையை அலங்கரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிரையின் மத்திய பகுதியில் செக்கடி குளத்தை ஒட்டி அமைந்திருக்கும் செக்கடி பள்ளியை யாராலும் மறந்துவிட முடியாது.
அருமையான கட்டிட கலையுடன் செக்கடி குளத்துக்கரையில் அமைந்து இருக்கும் செக்கடி பள்ளியின் அழகே தனிதான். சொல்லப்போனால் இணையத்தில் அதிராம்பட்டினம் என்றாலே அதன் முகவரியாக செக்கடிப்பள்ளிதான் இருக்கிறது. தொழுகை மட்டுமின்றி ஏராளமான திருமணங்கள் திருமணங்கள் செக்கடிப்பள்ளியில் நடத்தப்படுகின்றன. அதற்கு ஏற்க இதன் கட்டிடக் கலை உள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட செக்கடிப்பள்ளியின் திறப்பு விழா கடந்த 1972 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. இன்றுடன் செக்கடி பள்ளிவாசல் கட்டப்பட்டு 50 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது. இதனை நினைவுகூர்ந்து அதிரையர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.