SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகரத்திற்கான செயற்குழு கூட்டம் SDPI கட்சியின் அதிராம்பட்டினம் நகர தலைவர் A.J.முகமது அஜாருதீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N.முஹம்மது புஹாரி கலந்து கொண்டார்.
SDPI தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் N.M. ஷேக் தாவூத் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அஹமது அஸ்லம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ரஜப் மொஹிதீன் வரவேற்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1. அதிராம்பட்டினம் நகராட்சிக்கு குப்பை கிடங்கை சரி செய்ய வேண்டி அல்லது குப்பை கொட்டுவதற்கான சரியான இடத்தை வழங்க வேண்டுமாறும்,
2.அதிராம்பட்டினத்தை மையமாக கொண்டு புதிய தாலுக்கா அலுவலகம் அமைத்துதர வேண்டுமாறும்,
3. அதிராம்பட்டினத்திற்கு தீயணைப்பு நிலையம் அமைத்து தருமாறும்,
4.அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் நாய்கள் பெருமளவில் சுற்றித் திரிவதால் பெண்களும் குழந்தைகளும் பெரியோர்களும் இந்த நாய்களால் கடும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நாய்களிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும்,
5. அதிராம்பட்டினம் நகராட்சிக்கு, வரக்கூடிய காலம் மழைக்காலம் என்பதால் அனைத்து வார்டுகளிலும் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக வேண்டி வடிகால் வாய்க்கால்களை முறையாக சரி செய்து தருமாறும்,
6. பெற்றோர்களின் கவனத்திற்கு பெருமளவில் சாலை விபத்துகள் நடப்பதால் தங்களது பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை வாங்கி கொடுக்க வேண்டாம் எனவும் ஓட்டுனர் உரிமம் இல்லாத நபர்களுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி தர வேண்டாம் எனவும் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு இதனை செயல்படுத்த வேண்டுமாறும்,
7. அதிராம்பட்டினத்தில் பெருமளவில் பரவி இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருக்கும் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதை பழக்க வழக்கங்களை காவல்துறை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்,
8. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தியும் 24*7 நேர மருத்துவ சேவையை வழங்க வேண்டுமாறும், போன்ற பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த நகர செயற்குழு கூட்டத்தில் நகர நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக SDPI நகர பொருளாளர் M.I.ஜமால் முஹம்மது நன்றியுரை ஆற்ரீனார்.