தென் கொரியாவில் அதிரையர்கள் பணி நிமித்தமாக அங்கு தங்கி இருக்கின்றனர். அங்கு நேற்றிரவு ஷவ்வால் பிறை தென்பட்டதால் 29 நாட்களுடன் ரமலானை நிறைவு செய்து இன்று அவர்கள் புத்தாடை அணிந்து நோன்பு பெருநாளை கொண்டாடினர். நோன்பு பெருநாள் தொழுகையை ஒன்றாக நிறைவேற்றிய அவர்கள், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.