விளம்பரம்:
பனைமரங்கள் மீது ஏறி நன்கு வளர்ந்து நிற்கும் பாலை பகுதியில் சுண்ணாம்பு தடவப்பட்ட மண்பாண்ட கலயத்தை பனை மரத்தில் கட்டி தொங்க விட்டு, கலயத்திற்குள் விடப்பட்டு உள்ள பாலைக்கு அருகில் வளர்ந்து நிற்கும் பனை ஓலைகளை வெட்டி விடுவார்கள்.
ஒரு நாளைக்கு 3 முறை இந்த கலயம் கட்டி விடப்பட்டுள்ள பனை மரத்தின் பாலையை வெட்டி சீவி விடப்படும். ஒரு நாள் கழித்து பனை மரத்தில் ஏறி கலயத்தில் சேர்ந்திருக்கும் பதநீரை சேகரித்து அதை விற்பனை செய்வது வழக்கு. ஆனால் தற்போது மழை விட்டு, விட்டு பெய்து வருவதால் பதநீர் இறக்கும் கலயத்தில் மழைநீர் சேர்ந்து விடுவதால் பதநீர் இறக்கும் தொழில் பாதிப்படைந்துள்ளது.