அதிராம்பட்டினம் தாலுக்கா பணிகள் விறுவிறு.. கிராமங்களிடம் விருப்பம்கேட்கும் வட்டாட்சியர்

Editorial
0

கடந்த சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் பேசிய வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளின்படியின் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கை அடிப்படையிலும் வருவாய் நிர்வாக ஆணையரிடம் கருத்துரு பெறப்பட்டு அதை அமைப்பது பற்றி பரிசீலிக்கப்படும். 

பட்டுக்கோட்டையின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையை ஆய்வு செய்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்." என்றார்.

இதனை தொடர்ந்து அதிராம்பட்டினம் தாலுக்காவை அமைப்பதற்கான பணிகளை வருவாய்துறை தொடங்கி இருக்கிறது. அதன் அடிப்படையில், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள கிராமங்களை அதிராம்பட்டினம் வட்டத்தில் இணைப்பது தொடர்பாக பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அந்தந்த கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

பழஞ்சூர் வி.ஏ.ஓவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை சரகம், பழஞ்சூர் கிராமத்தை புதிதாக தோற்றுவிக்கப்படவுள்ள அதிராம்பட்டினம் வட்டத்தில் சேர்ப்பதற்கு ஆட்சேபணை இருப்பின் ஆட்சேபணையை நோட்டீஸ் கண்ட 15 தினங்களுக்குள் பட்டுக்கோட்டை வட்டாட்சியரிடமோ அல்லது பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியரிடமோ எழுத்து மூலமாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது." என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...