![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVzC8TI5h34R7kkayp9tDiva_XCVLNDwj-YlDiIbU4CqN2crM1vBfqTL_ldJaf-GSy67B5ekEBO6DhvN7O3BRV_r2LJuqfEdh5wmr7KRdMzoxWhDVkw9TEli-c_geLPi5jH4GuvDp20Wo/s16000/1652439427322493-0.png)
இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ARDA தரப்பில் தொடரப்பட்ட வழக்கு நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நிலம் ARDAவுக்கு சொந்தமானது தீர்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்ததால் பட்டுக்கோட்டை சாலையில் இருந்த நிலத்தில் ஷிபா மருத்துவமனை அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
வழக்கு நடந்து வந்த சமயத்தில் ARDAவின் மெயின் ரோடு நிலத்தில் குட்டை போல் தண்ணீர் தேங்கி பயனற்று கிடந்தது. அந்த சமயத்திலேயே 20 செண்ட் நிலத்தை வேறு சிலர் ஆக்கிரமித்து மீதம் 1.30 ஏக்கர் நிலம் இருந்தது.
விளம்பரம்:
இந்த நிலையில், தீர்ப்பு ARDA வுக்கு சாதகமாக வந்ததை அடுத்து அங்கு உள்ளூரில் அரசியல் செல்வாக்கு மிக்க தனி நபர்கள் நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் நில உரிமையாளர்களிடம் அனுமதி பெறாமல் கட்டைகளை கொண்டு வந்து இறக்கி கொட்டகை அமைக்க முயன்றார். தகவலறிந்த SDPI கட்சியினர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இது குறித்து அதிரை கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரளித்தனர்.
அதேபோல், இன்று அதிரை 13 வார்டு கவுன்சிலர் பெனாசிராவின் கணவரும் நகர SDPI கட்சி துணைத் தலைவருமான அசாருத்தீன் அதிரை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். இதனை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிக்கும் வகையில் கொட்டகை அமைப்பதற்காக நாரக்குட்டை நிலத்தில் போடப்பட்டு இருந்த பொருட்களை போலீசின் துணையோடு SDPI கட்சியினர் அகற்றி ஆக்கிரமிப்பாளர்களை காலி செய்ய வைத்தனர். தொடர்ந்து யாரும் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடாமல் இருக்க அப்பகுதியை சுற்றிலும் வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.