இந்த நிலையில் நாளை முதல் 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு பொது தேர்வு நடைபெற இருப்பதால் மேற்கண்ட வகுப்பில் படிக்கும் மாணவர்கள் தங்களின் படிப்பில் கவனம் செலுத்தி அனைத்து தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற உங்கள் அனைவரையும் நமது அணியின் அனைவர் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
அது சமயம் அனைத்து தேர்வுகளும் முடியும் வறை மேர்கண்ட வகுப்பில் படிக்கும் அத்துணை மாணவர்களும் தேர்வு முடியும் வறை நமது மைதானத்திலோ அல்லது வேறு மைதானத்திலோ நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடனும் கண்டிப்புடன் கேட்டு கொள்கின்றோம்.
உங்களின் எதிர்காலமே உங்கள் குடும்பத்தின் எதிர்காலம், நமது அணியின் எதிர்காலம் மற்றும் நமது சமுதாயத்தின் எதிர்காலம், எனவே இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அத்துணை மாணவர்களையும் மீண்டும் ஒருமுறை உண்ணில் ஒருவனாக உரிமையுடன் கேட்டு கொள்கின்றோம்.
மேற்கண்ட வீரர்கள் தவிர்த்து மற்ற அனைத்து உறுப்பினர்களும் தவறாது விளையாட வரும்படி அன்புடன் அழைக்கிறோம்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.