எனவே தேர்வெழுதும் இஸ்லாமிய மாணவர்களும், தேர்வு பணிக்கு செல்லும் இஸ்லாமிய ஆசிரியர்களும் ஜும்மா தொழுகைக்கு செல்வது கடினமான ஒன்றாகும். காரணம் 1.15 க்கு பிறகு தேர்வு மையத்தைவிட்டு பள்ளிவாசலுக்கு செல்ல குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகும். இதனால் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஜும்மா தொழுகை வீணாகலாம்.
அதே நேரம் அதிரை தரகர் தெரு (ஆசாத் நகர்) முகைதீன் ஜும்ஆ பள்ளியில் 1.40 மணிக்கு தான் ஜும்மா தொழுகை நடைபெறும். காதிர் முகைதீன் பள்ளிக்கு அருகாமையிலேயே இந்த பள்ளிவாசல் அமைந்துள்ளது. எனவே பள்ளி மாணவர்கள் தேர்வு முடிந்ததும் இங்கு வந்து உங்கள் தொழுகையை சரியான நேரத்தில் தொழுது கொள்ளலாம்.
அதேபோல் ஏ.ஜே. பள்ளியிலும் ஜும்மா தொழுகை நேரம் 1:30 மணிக்கு என மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.