படகுசவாரி, பூங்கா, பாலம்.. ரூ.1 கோடி செலவில் வேற லெவலில் மாறப்போகும் மல்லிப்பட்டினம் மனோரா

Editorial
0
மல்லிப்பட்டினம் ஊராட்சி அருகே சரபேந்திரராஜன்பட்டினம் மனோரா வரலாற்று புகழ்பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ஆனால், முறையான பரமரிப்பு இல்லாததாலும், பிணங்களின் சாம்பல்கள் கடலில் கரைக்கப்படுவதுடன் சுற்றுலா பயணிகளின் பிளாஸ்டிக் பொருட்களை போடுவதாலும் கடல் மாசடைந்து காலப்போக்கில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையும் குறைந்தது. படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்: 





இதனை பராமரித்து மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், பேராவூரணி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், ரூ.30 லட்சத்தில் பயணிகள் தங்கும் விடுதியும், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஏதுவாக ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் பாலம் அமைக்கவும் சுமார் பொதுமக், குழந்தைகள் மகிழ்வதற்காக பூங்கா அமைக்க ரூ.30 லட்சம் என ஒரு கோடி ரூபாய் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் சொந்த நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார்  நேரில் ஆய்வு செய்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...