அதிரை சொத்துவரி குளறுபடி: முதலமைச்சர், அமைச்சருக்கு மெயில் அனுப்பும் போராட்டத்தை தொடங்கிய சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA)

Editorial
0



சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், மண்டலத்துக்கு என நிர்ணயம் செய்யப்பட்ட வரியை வசூலிக்க வலியுறுத்தியும், நகராட்சி மண்டலங்களை மாற்றி அமைத்துத்தர வேண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சித்துறை செயலாளர், நகர்புற நிர்வாகத்துறை இயக்குநர், மண்டல நகராட்சி இயக்குநர், அதிராம்பட்டினம் நகராட்சி செயலாளர் உள்ளிட்டோருக்கு அதிரை ஷம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை தொடங்கியுள்ளது.

நகராட்சி சொத்துவரியை பொறுத்தவரை அதிரையில் கீழ்காணும் பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக சொத்துவரி உயர்வு என்பது மாநிலம் முழுவதும் உள்ள பிரச்சனையாக உள்ளது. அதை கைவிடக்கோரி அனைவரும் கீழ்காணும் லிங்கை கிளிக் செய்து மெயில் அனுப்பலாம்.


நகராட்சி மண்டலங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பது ஏ மற்றும் பி மண்டலத்தில் இருக்கும் பெரும்பாலானவர்களின் கோரிக்கை. எனவே அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்டவர்கள் கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


பி மண்டலத்தில் இருக்கும் சிலருக்கு ஏ மண்டலத்துக்கான வரி வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அத்தகைய புகார் உடையவர்கள் கீழ்காணும் லிங்கை கிளிக் செய்துகொள்ளலாம்.


இந்த மூன்று லிங்குகளையும் கிளிக் செய்தால் ஒரு பக்கம் திறக்கும் அதில், நீல நிறத்தில் UNDERLINE செய்யப்பட்ட தமிழ் எழுத்துக்கள் இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்கள் ஜி மெயில் செயலி திறக்கும். அதில் > பட்டனை அழுத்தினால் மெயில் போகும்.

இதுகுறித்து விளக்கம் வீடியோ...

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...