அதிராம்பட்டினத்தை தாலுக்காவாக அறிவிக்க வலியுறுத்துமாறு கோட்டாட்சியரிடம் SDPI கோரிக்கை

Editorial
0

தமிழ்நாடு தமிழ்நாடு சட்டப்பேரவை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், "அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளின்படியின் மாவட்ட ஆட்சியரின் கோரிக்கை அடிப்படையிலும் வருவாய் நிர்வாக ஆணையரிடம் கருத்துரு பெறப்பட்டு அதை அமைப்பது பற்றி பரீசீலிக்கப்படும்." என்றார்.
அதன் பின்னர் பேசிய பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை "மதுக்கூர் அல்லது அதிராம்பட்டினத்தை புதிய தாலுக்காவாக அமைக்க வேண்டும்." எனக்கோரினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராமச்சந்திரன், "பட்டுக்கோட்டையின் பரப்பளவு மற்றும் மக்கள் தொகையை ஆய்வு செய்து அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்குவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்." என்றார்.

இதனிடையே இன்று கோட்டாட்சியரை எஸ்டிபிஐ கட்சி நகர தலைவர் அஸ்லம், 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிர் கணவர் முஹம்மத் அஜாருதீன் ஆகியோர் சந்தித்து அதிராம்பட்டினத்தை தாலுக்காவாக அறிவிக்க தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்குமாறும் கேட்டுக்கொண்டு மனு அளித்தனர். இந்த சந்திப்பின்போது எஸ்டிபிஐ கட்சியின் நகர நிர்வாகிகள் ஜர்ஜிஸ், நசீர் மற்றும் மாலிக் உடன் இருந்தனர்.

மனு:

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...