அதிராம்பட்டினம்: புதிய நகராட்சி அலுவலகம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நமது ஊர் நகர்மன்ற அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் நகராட்சியாக இயங்கும் இடத்தில் இடம் பற்றாக்குறையினால் வேறு இடத்தில் நகராட்சி அலுவலக கட்டுவதற்கு ஆலோசிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் 26. 04. 2022 அன்று மாலை 4.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெற இருக்கிறது.
இதில் அனைத்துக் கட்சி மற்றும் ஜமாத்தினுடைய நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், தொண்டு, நிறுவனங்கள் அனைவரும் கலந்து கொண்டு தக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அலுவலகம் வேண்டுமா? வேண்டாமா? என்ற தங்கள் கருத்தை கீழே சொல்லுங்கள்