அதிரை நகராட்சித் துணைத் தலைவர் என முதல்வர் பங்கேற்ற அரசு பயிற்சி முகாமில் சான்றிதழ் பெற்ற இராம.குணசேகரன்

Editorial
0
நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் SDPI, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், பாஜக தலா ஒரு வார்டிலும் வென்றனர்.

இதனை அடுத்து நகர்மன்ற தலைவராக 10 வது வார்டில் வெற்றிபெற்ற MMS அப்துல் கரீமின் மனைவி தாஹிரா அம்மாள் திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அவர் போட்டியின்றி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேபோல் அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை சார்பில் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியான நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு துணைத் தலைவராக திமுக நகர செயலாளர் குணசேகரன் வெற்றிபெற்றார்.

இதுபோல் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே கண்டனம் தெரிவித்து பதவி விலக சொல்லி எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து குணசேகரன் இன்னும் பதவி விலகவில்லை. 

இந்த நிலையில் இன்று கலைவாணர் அரங்கில் மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அதிரை நகர துணைத் தலைவர் குணசேகரனும் கலந்துகொண்டார்.

இதனை தொடர்ந்து நகராட்சி துணைத் தலைவர் என குறிப்பிடப்பட்டு அவருக்கு பயிற்சி முகாமில் பங்கேற்றதற்கான அரசு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...