இதனை அடுத்து நகர்மன்ற தலைவராக 10 வது வார்டில் வெற்றிபெற்ற MMS அப்துல் கரீமின் மனைவி தாஹிரா அம்மாள் திமுக சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அவர் போட்டியின்றி நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல் அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்தது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியானது.
இந்த நிலையில், அதிரை நகராட்சி துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியான நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்டு துணைத் தலைவராக திமுக நகர செயலாளர் குணசேகரன் வெற்றிபெற்றார்.
இதனை அடுத்து இன்று கலைவாணர் அரங்கில் மேயர், துணை மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதன் நிறைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அதிரை நகர தலைவர் தாஹிரா அம்மாள், அவரது கணவர் MMS அப்துல் கரீம், துணைத் தலைவர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.