இந்த நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு அதிரை நகராட்சி மன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் தலைவர் தாஹிரா அம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் நகராட்சி துணைத் தலைவர், நகராட்சி ஆணையர், நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் 21 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஊர், மக்கள் நலன் சார்ந்து பின்வரும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன.
அதிராம்பட்டினம் நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள 24 கடைகளை 2022-2023 ம் நிதியாண்டிற்கு ஏலம் விடுவது,
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 31,066 மக்கள்தொகை உள்ளதால் 10000 மக்கள் தொகைக்கு ஒரு ஏக்கர் வீதம் 3 ஏக்கர் உரகிடங்கு தேவைப்படுகிறது. எனவே திடக்கழிவு மேலாண்மைக்கு தேவையான இடம் வாங்குவது,
பொது சுகாதாரத்தை பாதுகாத்திடவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும் பொது சுகாதார பொருட்கள் மற்றும் கிருமிநாசினிகள் வாங்குவது,
கோடைகாலத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோக பணிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் இரண்டு குடிநீர் மின்மோட்டார்கள் வாங்கி இருப்பில் வைப்பது,
அதிராம்பட்டினம் நகராட்சியில் மன்றக்கூட்ட அறை ஏதும் இல்லாத காரணத்தினால் நிர்வாக நலன் கருதி நகராட்சி அலுவலகம் அருகில் புதிய மன்றக்கூட்ட அறை கட்டுவது,
பழைய வீடுகளை இடித்து புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ள சொத்துவரிதாரர்களின் இடிக்கப்பட்ட சொத்துவரி விதிப்புகளை நீக்குவது,
தெருவிளக்குகள் இல்லாத மின்கம்பங்களில் கூடுதல் திறன் கொண்ட எல்.ஈ.டி பல்புகளை அமைப்பது,
பழுதடைந்த பாலங்களை பொது நிதியில் புதிய பாலங்களாக அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
*சொகுசு வாகனங்களை வாங்கும் திட்டத்தை நகராட்சி தள்ளிப்போட கோரிக்கை*
ReplyDeleteபெறுநர்
நகராட்சித் தலைவர்
அதிராம்பட்டினம்
இன்று (28/03/2022) தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு மாதத்திற்குப் பிறகு முதல்மைறையாக நகராட்சி மன்றம் கூடுகிறது.
இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
முக்கிய தீர்மானங்களில் நகராட்சி ஆணையர், தலைவர்களுக்கான சொகுசு வாகனங்கள், நகராட்சி கட்டடம், திடக்கழிவு மேலாண்மையை தனியாருக்கு விடுவது, மாதாந்திர வாகன செலவு நிதி ஒதுக்கீடு, பொதுப் பாலங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பலவற்றிற்கு இந்த முதல் அமர்வில் உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
மக்களின் அடிப்படைத் திட்டங்களுக்கு இன்னும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் பொதுமக்களிடம் வீட்டு வரி வசூலை துரிதப்படுத்த வேண்டி கடந்த வாரம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டுவதாக இருந்து பிறகு ஏதோ காரணத்தால் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று கூடும் முதல் அமர்வில் சொகுசு வாகனங்களுக்கு சுமார் 30இலட்சம் வரை நிதி ஒதுக்க தீர்மானம் கொண்டுவரப்படுவதாக தெரிகிறது.
இவற்றை நகராட்சித் தலைவர் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் திட்டங்களை குறிப்பிட்ட அளவில் நிறைவேற்றி மக்களின் நன்னம்பிக்கையை பெற முயற்சிக்க வேண்டும்.
நகராட்சி துப்புரவுப் பணிக்கு தேவையான வாகனங்களே இல்லாத போது, (தற்போது இரண்டு வாகனங்களே இருக்கிறது), சொகுசு வாகனங்கள் வாங்குவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
முகம்மது மாகிர்