அதிரை நகர துணைத் தலைவராக குணசேகரன் தேர்வு - தலைமைக்கும் கூட்டணிக்கும் துரோகம் செய்ததா அதிரை திமுக?

Editorial
0
நடந்து முடிந்த அதிரை நகராட்சித் தேர்தல்  திமுக 19 இடங்களில் வெற்றிபெற்று நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் SDPI, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக், பாஜக தலா ஒரு வார்டிலும் வென்றுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு வாரம் கடந்தும் அதிரை திமுகவில் இருக்கும் உள்கட்சிப் பூசல் காரணமாக நகர்மன்ற தலைவர் யார் என்ற இறுதி முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிரை நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதனிடையே அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியாகி இருக்கிறது.

இந்த நிலையில், அதிரை நகராட்சி துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டு ஒதுக்கப்பட்டது நகர திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ள நகர திமுக செயலாளர் அன்சர் கான், நகர தலைவர் இராம.குணசேகரனே துணைத் தலைவர் எனப்பேசியதாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டதாகக்கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் 10வது வார்டு கவுன்சிலரின் ஆதரவாளர்கள் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு கொட்டும் மழையில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய தில் நவாஸ் பேகத்தின் கணவர் ஹாஜா முகைதீன் திமுக துரோகம் செய்துவிட்டதாகவும் திமுக தலைமையின் உத்தரவை மீறி வேட்பாளரை நிறுத்தி இருப்பதாகவும் இதற்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்றும் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அதிரை நகர துணைத் தலைவராக இராம குணசேகரனை அதிரை திமுக கவுன்சிலர்கள் தேர்வு செய்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...