வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு வாரம் கடந்தும் அதிரை திமுகவில் இருக்கும் உள்கட்சிப் பூசல் காரணமாக நகர்மன்ற தலைவர் யார் என்ற இறுதி முடிவு எட்டப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிரை நகர்மன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதனிடையே அதிரை நகராட்சித் துணைத் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இதன்மூலம் அதிரை 19 வது வார்டு கீழத்தெருவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கோட்டூரார் ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி தில் நவாஸ் பேகம் அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது ஏறத்தாழ உறுதியாகி இருக்கிறது.
ஐந்தாண்டு கால உங்களது பணிகள் சிறக்க அனைத்து வார்டுகளுக்கும் முறையாக சீர்த்திருத்தங்கள் நடைபெற எனது வாழ்த்துக்கள்.
ReplyDelete