சேது ரோட்டை சேர்ந்த கமால் ரைஸ் மில் மர்ஹூம் ஹாலித் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி நெய்னா முஹம்மது சாஹிப் அவர்களின் மருமகளும், அகமது தாசிம் அவர்களின் சகோதரியும், ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஹாஜா அலாவுதீன் அவர்களின் தாயாரும், அக்பர்ஷா, அபுதாஹிர் அபு சாலிஹ், காலிது அகமது இவர்களின் பெரிய தாயாருமாகிய ஹாஜிமா சித்தி சபீனா அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.