இந்த நிலையில், தான் பேரூராட்சித் தலைவராக இருந்தபோது செய்த சாதனைகளையும், இந்த தேர்தலில் வெற்றிபெற்றால் கொண்டுவரப்போகும் திட்டங்களின் வாக்குறுதிகளையும் அவர் பட்டியலிட்டு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதில் சாதனைகளின் வரிசையில் அவர் செய்த குளம் தூர்வாருதல், நீர் நிரப்புதல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளார்.அதன் பின்னர் திட்டங்களின் வரிசையில் சாலை பராமரிப்பு, பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை குறிப்பிட்டுள்ள அஸ்லம், வார்டு மறுவரையறையில் உள்ள குளறுபடிகள் சரி செய்யப்படும் எனக் கூறியுள்ளார். வார்டு மறுவரையறையில் திமுக அரசு குளறுபடி செய்து இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கூறி சம்சுல் இஸ்லாம் சங்கம், SDPI, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.இந்த குற்றச்சாட்டை உள்ளூர் திமுக பிரமுகர்களே மறுத்து வரும் முன்னாள் சேர்மன் அஸ்லம், வார்டு மறுவரையில் குளறுபடிகள் சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்ததன் மூலம் அதை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.