அதிரை அருகே புதுப்பட்டினம் கடற்கரையில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்... ஏன் தெரியுமா?

Editorial
1 minute read
0

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரை கடந்த சில மாதங்களாக பிரபலமடைந்து வருகிறது. அமைதியான சூழல், கடற்காற்று, அருகில் உள்ள தென்னந்தோப்புகளின் நிழல், 2 கி.மீ தொலைவுக்கு வெண்ணிற மணற்பரப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் என அனைவரையும் இந்த கடற்கரை வசீகரித்து வருகிறது.

 இதனால், விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் ‘தஞ்சாவூர் மாவட்ட பீச்' எனப்படும் புதுப்பட்டினம் கடற்கரைக்கு வருகின்றனர். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கின்றனர். மேலும், குளிர்பானக் கடைகள், பொம்மைக் கடைகள் என ஏராளமான திடீர் கடைகள் முளைத்து வருகின்றன.

இந்த நிலையில் புதுப்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன் என சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு பதிலளித்துள்ள மல்லிப்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான், "ஆம் அந்த ஊர் ஜமாத் அனுமதியோடு வசூலில் ஈடுபடுகிறார்கள்...

முடிந்தவரை சுத்தம் செய்கிறார்கள்...

குப்பைகளை போட கிணற்று உரைகளை ஆங்காங்கே வைத்துள்ளார்கள்...

இது போல் மனோராவிற்கு செல்ல ஊராட்சி மூலம் ஏலம் விட்டு வசூல் செய்யப்படுகிறது...

மானோராவிற்கு செல்ல கடற்கரைக்கு செல்ல உள்ளூர் வாசிகளுக்கு இலவசம்...

இங்கே ஊர் ஜமாத்திற்கு அப்பணம் சென்று கடற்கரை மேம்பாட்டுக்கு பயன்படுகிறது...

அரசு அதை சுற்றுலா தலமாக்கிவிட்டால் இதுபோல் பணம் வசூல் செய்ய ஏலம் விடுவார்கள்...

அப்பணம் ஊராட்சிக்கு தான் செல்லும்." என விளக்கியுள்ளார்.

Post a Comment

0Comments
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...