அதிரை சுரைக்கா கொல்லையில் சாலை, வடிகால் வசதி ஏற்படுத்த அமைச்சரிடம் சம்சுல் இஸ்லாம் சங்கம் கோரிக்கை

Editorial
0
மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று லாவன்யா மண்டபத்தில் நடந்த மக்களை தேடி முதல்வர் மனு பெறும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அப்போது அமைச்சரிடம் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிரை சுரைக்கா கொல்லை ஹாஜியார் லைன் மற்றும் சால்ட் லைன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் கழிவு நீர் வசதிகள் செய்து தர வேண்டி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, 
"அதிரை சுரைக்கா கொல்லை ஹாஜியார் லைன் மற்றும் சால்ட் லைன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலை மற்றும் கழிவு நீர் வசதிகள் செய்து தர வேண்டி எங்கள் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் 1920ம் ஆண்டு துவங்கப்பட்டு சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்கு தொடர்ச்சியாக இது நாள்வரை தொண்டாற்றி வருகிறது. எங்கள் முஹல்லா 15 பள்ளிவாசல்களின் ஜமாஅத் பகுதிகளை உள்ளடக்கியது.

(விளம்பரம்:)

எங்கள் முஹல்லாவில் உள்ளடக்கிய சுரைக்காக் கொல்லை (ஹாஜியார் லைன்) மற்றும் சால்ட் லைன் உட்பட்ட பகுதிகளில் ஏறத்தாழ 220 குடியிருப்புகள் இருந்து வருகின்றது. இந்த பகுதிகளில் அடிப்படையான தார் சாலை வசதிகள் அனைத்து தெருக்களுக்கும் தார் சாலை வசதிகள் இல்லாததினால் ஆங்காங்கே நீர் தேக்கம் ஏற்பட்டு முறையான வடிகால் வசதிகள் இல்லாமல் பல நாட்களாக தண்ணீர் தேங்கி நாற்றம் ஏற்பட்டு கொசுத்தொல்லைகள் மற்றும் இதர சுகாதார கேடுகள் ஏற்படுகின்றது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் இப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை மனு அளித்தும் முறையான சாலைகளோ, கழிவு நீர் வடிகால் வசதிகளோ இதுவரை அமைக்கவில்லை. அதிரை செயல் அலுவலரிடம் பல முறை நேரில் சந்தித்து முறையிட்டும் பலன் இல்லை. சமீபத்தில் பெய்த மழையில் இப்பகுதி முழுவதும் குளம் போல் காட்சியளித்து, கொசுத்தொல்லைகள் மற்றும் இதர சுகாதாரக் கேடுகள் ஏற்படுகின்றது.
 இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. அத்தியாவசிய தேவைகளுக்கூட வெளியில் செல்வது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே, தயவுகூர்ந்து இப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்து தேவையான மேற்சொன்ன வசதிகள் செய்து தருமாறு கேட்டுக்கொள்வதுடன் குறிப்பாக இப்பகுதிகளில் கழிவு நீர் வசதிகள் அறவே இல்லாமல் இருப்பதால் இதற்கு முக்கியத்துவம் அளித்து உரிய முறையில் விரைந்து செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனக்குறிப்பிட்டு உள்ளது.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...