அதிரையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குளங்கள், ஏரி, குட்டைகள் நிரம்பியுள்ளன. அத்துடன் சாலைகளும் வீதிகளும் குடியிருப்பு பகுதிகளும் தண்ணீரால் சூழப்பட்டு உள்ளன. குறிப்பாக அதிரை சுரைக்காய் கொள்ளை பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கியதாகவும், பேரூராட்சியில் இதுகுறித்து புகாரளித்தபின் வந்த அரைகுறையாக நீரை அகற்றி புகைப்படம் எடுத்துச் சென்றதாகவும் அப்பகுதிவாசி நம்மிடம் தெரிவித்தார்.
அதன் பின்னர் பெய்த மழை தற்போது மீண்டும் தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த பாதையை சுற்றியுள்ள சாலைகள் உயரமாக கட்டப்பட்டதால் இங்கு மட்டும் தண்ணீர் தேங்குகிறது. நீர் செல்வதற்கு முறையான வாட்டம் இல்லாததும், மழை நீர் வடிகால் முறையற்று இருப்பதுமே இப்படி தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
டெங்கு போன்ற நோய்கள் அதிகம் பரவி வரும் நிலையில், தேங்கி நிற்கும் இந்த தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக நடந்தும் வாகனங்களில் செல்லவும் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.