திரிபுராவில் முஸ்லிம்கள் மீது ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் SDPI கட்சி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (29.10.2021) அதிரை பெரிய ஜும்மா பள்ளி வாயிலில் ஜும்மா தொழுகைக்கு பிறகு கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் முகம்மது புஹாரி கண்டன உரையாற்றினார்.
இந்த போராட்டத்தில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கக் கோரியும், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தக் கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள்.
என்ன நடந்தது திரிபுராவில்?
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்து கடந்த புதன்கிழமை பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தல் அமைப்பை சேர்ந்த 3,500 க்கும் மேற்பட்டவர்கள் காவிக் கொடிகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். அப்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவெறியை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பிய விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், அவ்வழியாக கண்ணில் தென்பட்ட இஸ்லாமியர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.
மேலும் அங்குள்ள மசூதிகள், இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை அடித்து உடைத்ததாகவும், இதை தடுக்க சென்ற இஸ்லாமியர்களும் கடுமையாக தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விஷ்வ இந்து பரிஷத்தின் இந்த வன்முறை வெறியாட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட மசூதிகள் இலக்கானதாகவும், நூற்றுக்கணக்கான கடைகள், வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. தாக்கப்பட்ட மசூதிகள், கடைகள் சிலவற்றை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தீ வைத்து எரித்த காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Visuals of grocery and ration shops burnt in Rowa yesterday. They were owned by Nizamuddin and Amir Hussain. This happened at around 3:30-4pm yesterday after the rally turned violent. As per Police the situation is under control. #TripuraMuslimsUnderAttack #Tripura pic.twitter.com/qNqqcllLVt
— Samriddhi K Sakunia (@Samriddhi0809) October 27, 2021
ஆனால், இவை அனைத்தும் சிறிய சம்பவங்கள் என திரிபுரா வடக்கு மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது.