அதிரையில் பத்தாயிரம் பனை விதைகளை நடும் பணியில் இளைஞர் குழு!

Editorial
0
அதிராம்பட்டினத்தில் ADIRAI TREE PROJECT வாட்சாப் குழு செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் அதிரை குளம் மற்றும் ஏரி கரையில்  பனை விதை நடும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 
அபூபக்கர் தலைமையில் சுமார் 6 நாட்களில் இதுவரை அதிரையில் அமைத்துள்ள 
ஆலடிக்குளத்தில் மற்றும்  செக்கடிக்குளத்தில் பனை விதை நடும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 618 பனை விதைகள் விதைத்து உள்ளர்கள்.
வாரத்தில் இரு நாட்களில் காலை/மாலை வேலையில் ஒரு மணி நேரம் ஒதுக்கி இப்பணியை செய்து வருகின்றனர். அடுத்தப்பட்டியாக 
1.கடற்கரைத்தெரு குளம் 
2.ஆசாத் நகர் குளம்
3.புதுத்தெரு குளம்
4.MSM நகர் குளம்
5.மேலத்தெரு குளம்
6.ரயில்வே நிலையம் 
7.ராஜாடம் சின்ன, பெரிய ஏரிகள் 
8.விளையாட்டு மைதானம் 
உள்ளிட்ட பல பொது இடங்களில் டிசம்பர் 2021 ஆண்டு இறுதியில் 10,000  பனை விதைகள் அதிராம்பட்டினம் தன்னார்வலர்கள் உதவியுடன் நட ஈடுபட உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தகவல்: அதிரை சகோதரர்கள்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...