அதிரையில் பல ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடினாலும், பல்வேறு தொடர்களை நடத்துனாலும் நமதூரிலிருந்து மாநில அளவிலான அணிகளுக்கு செல்வதில்லை. இறுதியில் கிரிக்கெட் திறமையை மூட்டை கட்டிவிட்டு பொருளாதார தேவைக்காக வேறு பணிகளுக்கு சென்று விடுகின்றனர்.
இந்த நிலையை மாற்றும் வகையில் நமதூர் சிறுவர்களை இளம் வயதிலேயே தொழில்முறை போட்டிக்கு தயார்படுத்தும் முயற்சியில் அதிரை சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
இதற்காக தொழில்முறை விளையாட்டு வீரர்கள் விளையாடும் STITCH பந்தில் விளையாட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நமதூர் சிறுவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் 16 வயதுக்கு உட்பட்டோருக்காக சிட்னி ப்ரீமியர் லீக் என்ற பெயரில் கிரிக்கெட் தொடரையும் நடத்த உள்ளனர். இன்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஏராளமான சிறுவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து சிறப்பாக விளையாடினர். இந்த தொடரில் விளையாடும் வீரர்களுக்கு சான்றிதழ்கள், சிறப்பாக செயல்படும் சிறுவர்களுக்கு பாராட்டு பதக்கங்களும் வழங்க உள்ளனர்.
கிரிக்கெட் திறமை கொண்ட அதிரை சிறுவர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து ஊக்கப்படுத்தும் அதிரை சிட்னி அணியினரின் இந்த முயற்சி பெரும் பாராட்டிற்கு உரியது.
வரவேற்கத் தகுந்த முயற்சி! பாராட்டுகள்!!
ReplyDelete