தஞ்சை மாவட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய பேரூராட்சியாக இருந்து வரும் அதிராம்பட்டினம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு நிலையில் இருந்து சிறப்பு நிலையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில், தற்போது அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில், மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன், அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாக அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் மொத்தம் 148 நகராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் ஒரு பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட அந்த பேரூராட்சியில் 30 ஆயிரம் அல்லது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 33 பேரூராட்சிகள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகையை பெற்றிருப்பதால் அந்த பேரூராட்சிகள் அனைத்தையும் நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.