பல ஆண்டுகளுக்கு பின் அதிரை CMP வாய்க்காலுக்கு விடிவுகாலம்

Editorial
0

அதிரையின் முக்கிய நீர் வழித்தடமான CMP வாய்க்கால் வழியாக பெரும்பாலான குளங்கள் ஆற்று நீர் கொண்டு நிரப்பப்படுவது வழக்கம். 
அனால், இந்த CMP வாய்க்கால் பல வருடங்களாக அரசால் தூர்வாரப்படாமல் உள்ளது. 

இதனால் நீர் செல்லும் பாதை குப்பைகளாலும் கழிவுநீராலும் நிரம்பி பயன்படுத்த முடியாத வகையில் இருந்து வந்தது. இதனை தூர்வாரி இருபுறமும் கரை மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் என்பது அதிரை மக்களின் பல நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இப்படி திறக்கப்படும் தண்ணீர் சில நாட்களில் காவிரி கடைமடை பகுதியான அதிரைக்கு வந்தடையும். 

ஆனால், கடந்த ஆண்டுகளில் பொதுப்பணித்துறை வாய்க்கால்களை தூர்வாராத காரணத்தால் கடைமடைக்கு போதிய தண்ணீர் வரவில்லை. எனவே இதனை தவிர்க்கும் வகையில் தற்போது வாய்க்கால்களை தூர்வாரும் பணியில் தமிழக பொதுப்பணித்துறை இறங்கியிள்ளது.

அந்த வகையில், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த அதிரை சி.எம்.பி. வாய்க்காலை பொதுப்பணித்துறை தூர்வாரியுள்ளது. தொக்காளிக்காடு தொடங்கி வண்டிப்பேட்டை முனை வரை சி.எம்.பி. வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவு நீர் அகற்றப்பட்டுள்ளது.

இதனால், தாமதமின்றி அதிரை குளங்களுக்கு சி.எம்.பி. வாய்க்கால் வழியாக தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...