தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவி வருவதால் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. அதனை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்கக்கூடிய மளிகை கடைகள், காய்கறி, கறி, பால் கடைகளை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதுபோல் பெரிய கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளன.
இதனால் காலை 10 மணிக்குள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைவீதிகள் ஒருசேர மக்கள் வருவதால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக அதிரை மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் மிகுதியாக காணப்படுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்காமல் இருந்திருந்தால், மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப திறந்தால் இந்த அளவு மக்கள் கூட்டம் காணப்படாது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்துவது கொரோனா பரவலை தடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில், அரசின் இந்த நேரக்குறைப்பு நடவடிக்கை வழக்கத்திற்கு அதிகமான கூட்டத்தை ஒரே நேரத்தில் திரள வைப்பதாகவே உள்ளது.
படங்கள்: அதிரை கடைத்தெரு,
நாள்: 18-05-2021