அதிரையில் முன்மாதிரியாக திகழும் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம்... அனைத்து முஹல்லாவின் வேண்டுகோள்!
personEditorial
May 06, 2021
0
share
File image
நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
நமது நாட்டில், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவுவதால், நமதூரில் உள்ள அனைத்து முஹல்லா நிர்வாகிகளும் அவரவர் சார்ந்துள்ள பகுதிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். மேலும் நமது மேலத்தெரு, தாஜுல் இஸ்லாம் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது போல் அந்தந்த முஹல்லாக்களிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஏற்பாடு செய்து அவரவர் முஹல்லாக்களில் தேவையுடையவர்களுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக அரசு வலியுறுத்தும் வழிகாட்டல்களை பேணி நமதூரில் பெரும் தொற்றின் பாதிப்புகள் ஏற்படாது காப்போம் என வலியுறுத்தி அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.