அதிரை மக்களே... கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லையா?

Editorial
0


கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுபவர்களின் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை, தமிழக அரசே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆனால், பெரும்பாலான குடும்ப அட்டைதாரர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படாமல் உள்ளனர். பெரும்பாலான அதிரை மக்களுக்கு இதற்கான வழிமுறையை அறியாமல் உள்ளனர். 

அவர்கள் கீழ்காணும் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து உங்கள் பகுதி விஏஓ விடம் கையெழுத்து பெற வேண்டும்.



பின் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகத்தில் கொடுத்து அங்கு புகைபடம் எடுத்து கொள்ள வேண்டும்.

இரண்டு  அல்லது மூன்று வார நாட்களுக்கு உங்கள் மருத்துவ காப்பிடு திட்ட கார்டு தயாராகிவிடும் 

என்னென்ன சான்றுகள் தேவை? 

குடும்ப அட்டை 

வருமானச் சான்று 

ஆதார் அட்டை

பயன்கள் : 

• அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் இணைக்கபட்டுள்ளது. 

  • இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோய் கண்டறியும் சோதனைகளும் மற்றும் தொடர் சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன. 

உதவி மையம் : 

  • இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இணையதள முகவரி: https://www.cmchistn.com

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...