அதிரையர்களிடம் நிதி வசூலிக்கும் கும்பல்... அனைத்து முஹல்லா எச்சரிக்கை

Editorial
0

கொரோனா தடுப்புக்கான முதல்வர் நிவாரண நிதிக்கு வெளிநாடு வாழ் அதிரையர்களிடம் அனைத்து முஹல்லாவின் பெயரை பயன்படுத்தி நிதி திரட்டும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்வர் நிவாரணத்துக்காக நிதி திரட்டுவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், அனைத்து முஹல்லா ஒப்புதல் இன்றி அதன் பெயரை பயன்படுத்தி நிதி திரட்டுவது மோசடியாகும். இவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து முஹல்லா கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம் முதல்வர் நிவாரணத்துக்கு பல தரப்பிலிருந்து பல கோடிக்கணக்கில் நிதி குவிந்த வண்ணம் உள்ளது. நமதூர் வாசிகள் அதிகளவில் நிதியுதவி வழங்கினாலும் அது தமிழகம் எங்கும் பகிர்ந்தளிக்கப்படுமே தவிர நமதூருக்கு சிறப்பு கவனிப்பு ஏதும் இருக்காது.

ஆனால், நமதூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு ஆம்புலன்ஸ் உதவி, ஆக்சிஜன் உதவி, மருத்துவ ஆலோசனைகளை நேரடியாக உடனுக்குடன் வழங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமுமுக, TNTJ போன்ற இயக்கங்கள் போதிய நிதி இல்லாமல் தவிக்கின்றனர். 108 ஆம்புலன்ஸை விட இந்த 3 ஆன்புலன்ஸுகளை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எனவே நமதூர் மக்களின் நிதியை முதல்வர் நிவாரணத்துக்காக வழங்காமல் முழுக்க முழுக்க நமதூர் மக்கள் பயன்பெறும் வகையிலான ஒரு பொது நிதி கணக்கில் திரட்டி உள்ளூர் மக்களுக்கு பயன்பெற செய்தல் வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...