தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிரையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அதிரையிலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால், கொரோனா குறித்த சந்தேகங்களும், அச்சங்களும், குழப்பங்களும் மக்களிடம் தீரவில்லை.
இன்னும் கொரோனா இல்லை என்றும் விதிகளை பின்பற்ற வேண்டாம் என்றும் சொல்லும் நபர்கள் அதிரையில் உள்ளனர். இதனால், நோய் அறிகுறிகள் இருந்தும் சோதனை செய்யாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், மாஸ்க் அணியாமல் மக்கள் உள்ளனர்.
இதுபோன்றவர்களால் கொரோனா வைரஸ் பரவல் அதிரையில் வேகமாக பரவி வருகிறது. முதலிலேயே சோதனை செய்து சிகிச்சை பெறாமல், உடல் நிலை மோசமான பின் மருத்துவமனையை மக்கள் அணுகுகின்றனர். அந்த சமயம் ஆக்சிஜன், படுக்கைகள் கிடைக்காமல் அலையும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இறுதியால லட்சங்கள் செலவழித்தும் உயிரை காக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே மக்களுக்கு கொரோனா குறித்த சந்தேகங்கள், அச்சங்களை போக்கும் விதமாக அதிரையில் கொரோனா நிவாரண மையத்தை தொடங்கியுள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு, அவசர உதவி எண்களையும் அறிவித்து உள்ளது.