தஞ்சை, திருவாரூர் கிழக்கு கடற்கரையோரத்தில் மிக முக்கியமான ஊராக அதிராம்பட்டினம் உள்ளது. வணிகம், கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற பல முக்கிய காரணங்களுக்காக அதிராம்பட்டினத்துக்கு வெளியூர்களில் இருந்து மக்கள் நாள்தோறும் வருகை தருகிறார்கள். அதிக மக்கள் தொகை, பரப்பளவு, அதிக வீடுகளை உள்ளடக்கிய நமதூரில் அவசர மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பற்றாக்குறை உள்ளது.
108 ஆம்புலன்ஸ் பட்டுக்கோட்டையில் இருந்து வர வேண்டும் என்பதால் உடனடியாக அழைத்து செல்ல ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. தற்போது நிலவும் மருத்துவ அவசர நிலை காலத்தில் ஒரு ஆம்புலன்ஸ் போதுமானதாக இல்லை.
எனவே, அதிரை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் ஆக்சிஜன், ஐ.சி.யு கருவிகள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் கூடிய புதிய ஆம்புலன்ஸ் வாங்கியுள்ளனர்.
அதிரை மக்களின் நிதி பங்களிப்புடன் தயாராகியுள்ள இந்த ஆம்புலன்ஸின் அர்ப்பணிப்பு விழா 10-ம் தேதி மாலை 4 மணிக்கு அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறுகிறது.