விதிகளை பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகிக்கவும் - ஜமாஅத்துல் உலமா

Editorial
0

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதை கருத்தில் கொண்டு 30-04-2021 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அரசு தடை ஆணை வெளியிட்டுள்ளது. 

அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் விதத்தில் அரசு ஆணையை ஏற்று வரும் 30-04-2021 வரை அனைத்து தொழுகைகளையும் தங்களது வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளிவாசல் பணியாளர்கள் பள்ளியில் தொழுகை நடத்த அனுமதியுள்ளதால், ஐங்காலத் தொழுகைகளையும் தராவீஹ் தொழுகையையும் பள்ளிப் பணியாளர்களைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளவும். 

பள்ளிவாசலில் இஃப்தார் நிகழ்வுகள் நடத்த வேண்டாம். கஞ்சி காய்ச்சுபவர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்களுக்கு வழங்கி விடவும் என தெரிவித்துள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...