வெறிச்சோடிய அதிரை வீதிகள் - முழு ஒத்துழைப்பு நல்கிய மக்கள்

Editorial
0

இன்று முழு ஊரடங்கால் அதிரையில் வெறிச்சோடிய சாலைகள். பெரும்பாலான கடைகள் முழுமையாக  அடைப்பு.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை அடுத்து பெருந்தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கினை நடைமுறைபடுத்தியுள்ளது.

அந்த வகையில் அதிரையிலும் முழு ஊரடங்கு முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. பால், மருந்துகடைகள் தவிர்த்து காய்கறி கடை, இறைச்சி கடைகள், தேனீர் கடைகள், உணவகங்கள், வணிகவளாகங்கள், மளிகை கடைகள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டுள்ளன. 

பள்ளிவாசல்களிலும் தொழுகை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் நடமாடவில்லை. இதனால் கடைத்தெரு, பேருந்துநிலையம்,  உள்ளிட்ட முக்கிய தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 










Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...