அதிரை மக்களே... ஈசியாக வாக்காளர் பட்டியலில் உங்கள் இருப்பதை பார்த்து பூத் ஸ்லிப் பெறலாம்

Editorial
0


உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிய 
தேசிய வாக்காளர் சேவைதளமான NVSP-யின் (https://electoralsearch.in/) என்ற தளத்துக்கு செல்லுங்கள். அதில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை இரண்டு வழிகளில் அறிந்துகொள்ள முடியும். 

1. உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.


2. வாக்காளர் அட்டையில் இருக்கும் EPIC எண்ணைப் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.

EPIC எண் இல்லையெனில்,

NVSP Electoral Search (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by Details (தகவல்களை உள்ளீடு செய்து) என இருப்பதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதில் உங்களின் பெயர், பாலினம், வயது, தொகுதி முதலிய விவரங்களைப் பதிவிட வேண்டும். பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் சமயத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

EPIC எண் இருந்தால்,

NVSP Electoral Search  (எலக்ட்ரோல் தேடல்) பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.

Search by EPIC No என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பிறகு, அங்குள்ள கட்டத்தில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பின் Search என இருப்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர், உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.

அதில் உங்கள் பெயருக்கு முன்னால் இருக்கும் View details என்ற பட்டனை அழுத்தினால் பூத் ஸ்லிப் கிடைக்கும். அந்த பக்கத்தின் கீழ் இருக்கும் Print பட்டனை அழுத்தினால் பூத் ஸ்லிப் நகலை பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...