மக்கா மஸ்ஜித் ஹரமில் கத்தியை காட்டி மிரட்டிய நபர்... பரவும் வதந்தியும், உண்மையும்

Editorial
0

மக்கா மஸ்ஜிதுல் ஹரமில் முதல் மாடியில் கடந்த செவ்வாய்க்கிழமை 30/03/2021 அன்று கூர்மையான ஆயுதத்துடன் ஒருவர் பயங்கரவாத அமைப்புக்கள் சிலவற்றின் வாசகங்களை முழங்கி அச்சுறுத்தியதி பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நபர் கொலை செய்யப்பட்டதாகவும் இது நபியவர்களின் முன்னறிவிப்புக்களில் ஒன்று எனவும் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றது. இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

சம்பந்தப்பட்ட நபர் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சவூதி அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சவூதி ஊடகமான SIASAT செய்தி வெளியிட்டுள்ளது. 

 கைது செய்து அழைத்துச் செல்லும் வீடியோவை கீழே இங்கு நாம் வழங்கியுள்ள ட்விட்டர் லிங்கில் சென்று காணமுடியும். 





Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...